Pages

Saturday, 30 May 2015

காலப்பிரவாகம் தமிழ்நாவல் - முன்னுரை


வணக்கம் இது எங்களின் முதல் முயற்சி,
ஏற்கனவே இரண்டு நாவல்கள்
பிரியா நிலையத்தின்  மூலம்
முழு புத்தகமாக வெளியிட்டு இருந்தாலும்
இணையதளத்தில் தமிழ்சுரபியின் மூலம்
தொடர்கதை வடிவில் முதல் முறையாய்
அடியெடுத்து வைத்து இருக்கிறோம் .
இது இரு சகோதரிகளின் கூட்டு முயற்சி
(ஸ்ரீலஷ்மி - உஷா ஸ்ரீனிவாசன், லதா ஸ்ரீதர் )

காலபிரவாகம்
இது ஒரு நான்கு தலைமுறை கதை. நம் கதையின் முக்கிய நாயகி - ரங்கம் என்கிற ரங்கநாயகி,
நான்கு தலைமுறையைக்   கண்ட  தொண்ணூற்றி ஆறு வயதான இளமங்கை ,
ஒரே நிகழ்வை வெவ்வேறு காலகட்டங்களில் எதிர் கொண்டது தான்
இந்த காலபிரவாகம் ,
இதென்ன இரெண்டே வரிகளில் கதை சுருக்கமா என்று
கேட்பவர்களுக்கு போகப்போக புரியும்
இந்த பிரவாகம் எவ்வாறு பயணிக்கிறது என்று,
அன்பு , பாசம் , காதல் ,சோகம் , பிரிவு என
அனைத்தும் கலந்து இருக்கும் இந்த காலபிரவாகம்
நதியாய் பொங்கி பூரித்து
தங்கு தடையின்றி ஓடி
வாழ்க்கை எனும் சாகதரத்தில் எப்படி கலக்கிறது என்பதே
இந்தக் கதை.

வாசக தோழர்களே உங்கள் ஆதரவை எங்கள் முதல் முயற்சிக்கு அளித்து
உங்களின் மேன்மையான கருத்துகளை எங்களிடம்
பகிர்ந்து கொள்ளுங்கள்.
பிரவாகம் உற்சாகமாய் பொங்கிப் பெருகட்டும் .

எங்களுக்கு வாய்பளித்த தமிழ்சுரபிக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!!




0 comments:

Post a Comment